ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு


ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் திருட்டு போனது

மதுரை


மதுரை மதிச்சியம் காந்திநகர் ஆசாத்தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில், வீட்டில் வேலை செய்யும் பெண் ஊழியா் மீது சந்தேகம் இருந்்தது. அதுகுறித்து அவாிடம் ேகட்ட ேபாது கணவா் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவா்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story