250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கந்தர்வகோட்டை அருகே 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

250 கிேலா புகையிலை பொருட்கள்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே புதுக்குடையான்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் கோவிந்தராஜ் (வயது 35). இவர், புகையிலை பொருட்களை மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவிந்தராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி கிராமத்தில் உள்ள பாஸ்கர் (35) என்பவருக்கு சொந்தமான பாட்டில் தயாரிக்கும் கம்பெனியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில், 250 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பாஸ்கரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story