காருடன் 250 கிலோரேஷன் அரிசி பறிமுதல்


காருடன் 250 கிலோரேஷன் அரிசி பறிமுதல்
x

காருடன் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

தென்காசி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள ஆழ்வார் துலுக்கப்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story