250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்; பெண்கள் உள்பட 5 பேர் கைது


250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்; பெண்கள் உள்பட 5 பேர் கைது
x

அன்னவாசல் அருகே சீகம்பட்டி குளத்துக்கரையில் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையை அடுத்த சீகம்பட்டி பகுதிகளில் சிலர் குளத்துக்கரை மற்றும் குளத்துமடை ஓரங்களில் சாராய ஊறல் போட்டுள்ளதாக புதுக்கோட்டை நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறப்புபடை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சீகம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீகம்பட்டி குளத்துக்கரை மடைபகுதி அருகிலும், கரையிலும் 7 பிளாஸ்டிக் பேரல்களில் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 8 லிட்டர் எரி சாராயம் ஆகியவற்றை கண்டு பிடித்தனர். பின்னர் கள்ளச்சாராய ஊறல் போட்ட சீகம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 26), பெருமாள் (23), சரத்குமார் (20), உப்புபாறையை சேர்ந்த கண்ணகி (38), மகேஷ்வரி (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்த 250 லிட்டர் கள்ளச்சாராயம், 8 லிட்டர் எரி சாராயம் ஆகியவை புதுக்கோட்டை நகர மது விலக்கு அமலாக்கத்துறையில் ஒப்படைத்தனர்.


Next Story