25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பெண் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்


25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பெண் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
x

பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றத்தை வலியுறுத்தி 25 ஆயிரம் கிலோ மீட்டர் பெண் ஒருவர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் வந்த அவரை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பாராட்டினார்.

வேலூர்

பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றத்தை வலியுறுத்தி 25 ஆயிரம் கிலோ மீட்டர் பெண் ஒருவர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் வந்த அவரை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பாராட்டினார்.

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஷாமால்வியா (வயது 24). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தனிஒருவராக தொடங்கினார்.

இந்த பயணம் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி இதுவரை குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் பயணித்த தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவர் நேற்று வேலூர் வந்தார். கலெக்டர் அலுவலகம் வந்த அவரை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்று, வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று வாழ்த்து கூறினார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், தாசில்தார்கள் செந்தில்குமார், பாலாஜி பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆகஸ்டு 15-ல் நிறைவு

இந்த பயணம் குறித்து ஆஷா மால்வியா கூறுகையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 7,500 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளேன். இந்த பயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று இறுதியில் டெல்லியில் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முடிக்க உள்ளேன் என்றார். ஆஷாமால்வியாவுக்கு அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

==========


Next Story