பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து 2,565 மாணவர்கள் சாதனை


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு   100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து  2,565 மாணவர்கள் சாதனை
x

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்டத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து 2,565 மாணவர்கள் சாதனை

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி சதவீதம் 92.71 ஆகும். மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேசமயம், 2,565 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

21 பாடங்களிலும், 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- கணிதம்-88, இயற்பியல்-26, வேதியியல்-71, உயிரியல்-84, வணிகவியல்-161, கணக்கு பதிவியல்-157, பொருளியல்-41, கணினி அறிவியல்-153, கணினி பயன்பாடுகள்-99, வேளாண் அறிவியல்- 349, தணிக்கையில்- 319, அடிப்படை வாகனவியல்-24, அடிப்படை கட்டடவியல்-100, அடிப்படை எந்திரவியல்-108, வணிக கணிதம்-2, கணினி தொழில்நுட்பம்-3, நெசவு மற்றும் தொழில்நுட்பவியல்-5, நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பியல்-148, தட்டச்சு மற்றும் கணினி-324, அடிப்படை மின்னணுவியல்-57, அடிப்படை மின்னியல்-222.


Next Story