தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு
x

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) தேன்மொழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 3,172 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 793 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் வக்கீல்கள் ஸ்ரீதர், நீலமேகவண்ணன், தமிழ்செல்வன், நடராஜன், சுப்பிரமணியன், தன்ராஜன், ரவிக்குமார், வேலவன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.

இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,108 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 16 லட்சத்து 35 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 491 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.17 கோடியே 23 லட்சத்து 67 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story