பதப்படுத்தப்பட்ட 26 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல்
சமாதானபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 26 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
சமாதானபுரம்:
சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா ஆலோசனையின் பேரில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தினார்.
அப்போது, சமாதானபுரத்தில் உள்ள 2 மாட்டு இறைச்சி கடைகளில் முந்தைய நாள் மீதியிருந்த இறைச்சிகளை பதப்படுத்தி சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் ரூ.7 ஆயிரத்து 800 மதிப்புள்ள 26 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளித்து அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story