திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் செல்பி செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் செல்பி செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாய் விமானம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர்.
தங்கம் பறிமுதல்
அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த இம்ரான்கான் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வைத்திருந்த செல்போனின் செல்பி ஸ்டிக்கை வாங்கி சோதனை செய்தபோது, இதில் 503 கிராம் எடை கொண்ட தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக இம்ரான்கானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---