ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை, பணம் திருட்டு
மதுரையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை, பணம் திருடப்பட்டது.
மதுரையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை, பணம் திருடப்பட்டது.
ஆசிரியர் வீடுமதுரையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை, பணம் திருடப்பட்டது.மதுரையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை, பணம் திருடப்பட்டது.
மதுரை தெப்பக்குளம் கொண்டிதொழு தெருவை சேர்ந்தவர் பீமல்ராய் (வயது 32). பள்ளி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு இவரது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே வீட்டை பூட்டி விட்டு குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது.
நகை, பணம் திருட்டு
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன.
மேலும் அதில் வைத்திருந்த 26 பவுன் தங்க நகைகள், ஒரு கைக்கடிகாரம், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பீமல்ராய் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.