2.600 டன் உர மூட்டைகள் நெல்லைக்கு வந்தன
நெல்லைக்கு ரெயில் மூலம் 2.600 டன் உர மூட்டைகள் வந்தன.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மூலம் நெல் மற்றும் பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதற்கு டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் மற்றும் யூரியா போன்ற உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து உரம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 42 ரெயில் பெட்டியில் 2,600 டன் டி.ஏ.பி மற்றும் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய சரக்கு முனையத்துக்கு வந்து சேர்ந்தது.
அங்கு தொழிலாளர்கள் உர மூட்டைகளை ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். அவை நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story