2623 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல்


2623 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல்
x

தஞ்யசை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 2623 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ப்பட்டுள்ளது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்யசை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 2623 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

தஞ்சை மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் ஒரத்தநாடு, கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 1-4-2023 முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் கிலோ ரூ.108.60 என்ற வீதத்தில் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி தற்போது வரை 1574 விவசாயிகளிடமிருந்து 2623.400 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம், பாபநாசம், தஞ்சை மற்றும் ஓரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விலைஆதரவு திட்டத்தின்கீழ் பச்சைபயறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 13 விவசாயிகளிடமிருந்து 14.600 டன் அளவுள்ள பச்சைபயறு குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.77.55 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.3.37 கோடி பொருளீட்டுக்கடன்

மேலும் மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாட்டில் உள்ளதால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு சென்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் மூலம் நடத்தப்படும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்.மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்து அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை 5 சதவீத வட்டி வீதத்தில் பொருளீட்டுக்கடன் பெற்று பயனடையலாம். நடப்பாண்டு 171 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 37 லட்சம் பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகள் பரிவர்த்தனைக்கூட, உலர்கள வசதிகள் மற்றும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகுமாறு தஞ்சை விற்பனைக்குழு செயலாளர் சரசு கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story