காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது
பொங்குபாளையம் அருகே குடியிருப்புகள் மத்தியில் செல்லும் மின்கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியிருப்பு
திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சியில் பள்ளிபாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் குடியிருப்புகளின் நடுவே மின்கம்பிகள் செல்கிறது. இதை மாற்ற வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மின்கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி திருமுருகன்பூண்டியில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் 21-ந் தேதி (நேற்று) காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
ஆனால் அதையும் மீறி சதீஷ்குமார் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் நேற்று காலை திருமுருகன்பூண்டி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் பொதுமக்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
27 பேர் கைகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 27 பேர் கைதுது
அப்போது பொதுமக்கள் கூறும்போது ' குடியிருப்பு பகுதியில் மின்கம்பி செல்வதால் ஆபத்து உள்ளது. எனவே மின்கம்பியை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். இதையடுத்து 13 பெண்கள், 14 ஆண்கள் என 27 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதுடன், மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் வழி இரும்பு தடுப்பான்களால் அடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.