சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேர் கைது
பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை வ.உ.சி சிலை முன்பிருந்து மேலப்பாளையம் வழியாக டவுன் வரையிலும் இந்து முன்னணியினர் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலையில் இந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு நடைபயணம் புறப்பட்டனர்.
பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணியினர் சென்றபோது, அவர்களை துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி மேலப்பாளையத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதனால் இந்து முன்னணி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்து முன்னணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேரை போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேர் கைது
பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேர் கைது கைது செய்யப்பட்டனர்