காரில் கடத்திய 270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


காரில் கடத்திய 270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கொடைரோடு அருகே காரில் கடத்திய 270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார், கொடைரோடு சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்ததை கண்டு போலீசார் அதிர்சசி அடைந்தனர். இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா மான்மாந்தூரை சேர்ந்த சிவக்குமார் (வயது 29) என்பதும், ஓசூரில் இருந்து மதுரைக்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 270 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story