டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14-ந் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை


டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14-ந் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை
x

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14-ந் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை,

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து, 76-வது ஆண்டு பிறந்துள்ளது. சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்.

இதற்கிடையில், சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது.

அதன்படி, டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.55.77 கோடியும், சேலத்தில் ரூ.54.12 கோடியும், திருச்சியில் ரூ.53.48 கோடியும், கோவையில் ரூ.52.29 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Next Story