மது, சாராயம் விற்ற 28 பேர் கைது
திருப்பத்தூர் பகுதியில் மது, சாராயம் விற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதிகளான புதூர் நாடு, கோரிப்பள்ளம், தேவராஜபுரம் ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக தீவிர மதுவிலக்கு வேட்டை நடைபெற்றது. இதில் இதுவரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 228 லிட்டர் வெளிமாநில மதுபானமும், 27 லிட்டர் உள்நாட்டு மதுபானம், 513 லிட்டர் சாராயம், சுமார் 8,800 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சாராயம், மதுபானம் கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story