தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் - தீயணைப்புத்துறை தகவல்...


தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் - தீயணைப்புத்துறை தகவல்...
x
தினத்தந்தி 25 Oct 2022 9:37 AM IST (Updated: 25 Oct 2022 9:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நேற்று களை கட்டியது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.


Next Story