ரூ.2,800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்-கலெக்டர் விஷ்ணு சந்திரன் ேபட்டி


ரூ.2,800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்-கலெக்டர் விஷ்ணு சந்திரன் ேபட்டி
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2,800 கோடியில் காவிரி குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

பனை மர விதை திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாட்டில் கலந்து கொண்டு ராமநாதபுரம் வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது:-

தமிழக அரசின் அனைத்து திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளை தவிர்க்கவும், பணிகளை விரைவுப்படுத்தவும் உத்தரவிட்டார். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி பனை மர விதைகளை நட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதை பாராட்டி இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ரூ.2,800 ேகாடியில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் திட்டங்களும் ரூ.500 கோடி செலவில் பழுது பார்த்து சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி பழுதடைந்த குழாய்கள், குடிநீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர காவிரியில் இருந்து ரூ.2,800 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 2 திட்ட பணிகளும் நிறைவேற்றப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் அடியோடு தீரும்.

இந்த 2 திட்டங்களையும் அடுத்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story