கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 290 மனுக்கள் பெறப்பட்டன

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 290 மனுக்கள் பெறப்பட்டன
x

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 290 மனுக்கள் பெறப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 290 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அந்த வகையில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 290 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story