சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில்2-வது நாளாக ஊழியர்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்


சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில்2-வது நாளாக ஊழியர்கள்  சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:14+05:30)

சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில்2-வது நாளாக ஊழியர்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

சாத்தான்களம்:

சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊழியர்கள் 2-வது நாளாக சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் யூனியன் ஆணையாளரும் பங்கேற்றதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

பணி நெருக்கடி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊரக வளர்ச்சித் துறையில் அதிகரித்து வரும் பணி நெருக்கடி், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொளி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்குதல், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் 2 நாட்களுக்கு ஒட்டுமொத்த சிறுவிடுப்பு போராட்டமும், டிச. 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

2-வது நாளாக போராட்டம்

இதன்படி சாத்தான்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள 41 ஊழியர்களில் நேற்று முன்தினம் 21 சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக யூனியன் ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 22பேர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அலுவலர்கள் இல்லாமல் யூனியன் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. அலுவலகத்தில் பணிகள் முடங்கியது.


Next Story