2-வது நாள் நேர்காணலில் குவிந்த ஆண்கள், பெண்கள்
2-வது நாள் நேர்காணலில் குவிந்த ஆண்கள், பெண்கள்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 117 விற்பனையாளர்கள், 17 கட்டுனர்கள் பதவிகளுக்கு 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் நாகர்கோவில் டதி பள்ளியில் தொடங்கியது. நேர்காணலில் பங்கேற்க ஏராளமான பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் வந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து 2-வது நாளாக நேற்று நேர்காணல் நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். நேர்முக தேர்வுக்கு வந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. 2-வது நாள் நேர்காணலிலும் ஏராளமான பட்டதாரிகள், என்ஜினீயர்கள் பங்கேற்றதை காணமுடிந்தது. இந்த பணிகளுக்கு 12-ம் வகுப்பு தகுதி என்ற அடிப்படையில் ஆட்கள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், விண்ணப்பத்திருந்த பெரும்பாலானோர் படித்து முடித்த பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேர்காணல் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.