2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்


2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
x

பழனி வையாபுரிகுளத்தில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

திண்டுக்கல்

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, பழனியில் உள்ள வையாபுரிகுளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி பழனி பஸ்நிலையத்தின் அருகே குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நகராட்சி கழிப்பிட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. 2-வது நாளாக நேற்று, திருஆவினன்குடி அருகே வையாபுரிகுளத்தில் கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நாகராஜ் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்றது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது, பழனி வையாபுரிகுளத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறைவு பெற்றவுடன் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது, ஆகாய தாமரை செடிகளை அகற்றுவது போன்ற பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றனர்.


Next Story