கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை
கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாயில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்டமாக இணையதளம் மூலமாக நடைபெற்று முடிந்தது. தற்பொழுது மீதமுள்ள நிரப்பப்படாத முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு காலியிடத்தினை நிரப்பி கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து 2-ம் கட்ட இணையதள மூலமாக பதிவு செய்ய கிடைக்க பெற்றமையை தொடர்ந்து இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவ-மாணவிகள் மற்றும் பட்டய சேர்க்கைக்கு சேர விருப்பமுள்ள மற்றும் விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகள் அனைவரும் நேரடியாக கல்லூரிக்கு வருகை புரிந்து இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக பதிவு செய்து சேர்க்கையினை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 04328 243200 என்ற தொலைபேசி எண்ணையும், 9962488005, 8072600082, 9952787062, 8667404459 8012978060, 9751211929 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.