அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
நாட்டறம்பள்ளி அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 12-ந் தேதி தொடங்குகிறது.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்கான இளங்கலை (தமிழ், வணிகவியல்) இளமறிவியல் (புவியியல், தாவரவியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
பி.எஸ்சி, தாவரவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. புவியியல் ஆகிய பாடபிரிவுகளுக்கு 13-ந் தேதியும் பி.ஏ. தமிழ், பி.காம். வணிகவியல், ஆகிய பாடபிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வின்போது மாணவர்கள் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வரவேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் 10,11, மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ். வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.