அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று 2-ம் கட்ட கலந்தாய்வு
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இணையதள வழியாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
அதன்படி இன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும், நாளை (சனிக்கிழமை) இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான சுற்றுச்சூழல் அறிவியல், இயற்பியல் வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 12-ந் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
பள்ளி மாற்று சான்றிதழ்
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.