சென்னை- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரெயில் 2-வது சோதனை ஓட்டம்


சென்னை- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரெயில் 2-வது சோதனை ஓட்டம்
x

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரெயிலின் 2-வது சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று சென்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரெயிலின் 2-வது சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று சென்றது.

2-வது சோதனை ஓட்டம்

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை வருகிற 8-ந் தேதி பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 30-ந்் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று 2-வது கட்டமாக சோதனை ஓட்டம் நடந்தது. காலை 5.40 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காலை 8 மணியளவில் முதல் பிளாட்பாரத்தில் வந்தது. அங்கு ஒரு நிமிடம் நின்று சேலம் நோக்கி புறப்பட்டது. 9.15 மணியளவில் சேலம் சென்றடைந்தது. அங்கு 5 நிமிடம் நின்று புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையத்தை 10.8 மணியளவில் அடைந்தது. அங்கும் 5 நிமிடம் நின்றது. அதேபோன்று திருப்பூர் ரெயில் நிலையத்தை 10.51 மணியளவில் சென்றடைந்து அங்கு 3 நிமிடம் நின்று கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டு 11.40 மணியளவில் கோயம்புத்தூர் சென்றடைந்தது. வந்தே பாரத் ரெயிலில் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் சென்றனர்.

ஒரு நிமிடம் நின்றது

மீண்டும் கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து 12.10 மணியளவில் புறப்பட்டு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 12.50 மணியளவில் வந்தடைந்தது 3 நிமிடம் நின்று புறப்பட்டு, ரெயில் நிலையத்துக்கு 1.33 மணியளவில் சென்றடைந்து அங்கு 5 நிமிடம் நின்று சேலம் நோக்கி புறப்பட்டு 2.28 மணிக்கு சேலம் வந்தடைந்தது. அங்கு 5 நிமிடம் நின்று புறப்பட்டு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை மாலை 4 மணியளவில் கடந்து சென்னை ரெயில் நிலையத்திற்கு மாலை 6.10 மணியளவில் சென்றடைந்தது.

கடந்த மாதம் 30-ந்் தேதி ஜோலார்பேட்டையில் நிற்காமல் சென்றது. தற்போது 2-வது சோதனை ஓட்டத்தின்போது ஒரு நிமிடம் நின்று சென்றது. 2-வது சோதனை ஓட்டத்தில் அரை மணி முன்னதாக 6.10 மணியளவில் சென்னையை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story