2-வது மண்டல குழு தலைவர் அலுவலகம் திறப்பு விழா


2-வது மண்டல குழு தலைவர் அலுவலகம் திறப்பு விழா
x

வேலூர் மாநகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட 2-வது மண்டல குழு தலைவர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் புதுப்பிக்கப்பட்ட மண்டல குழு தலைவர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மண்டல குழு தலைவர் வீனஸ் ஆர்.நரேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் முகமதுசகி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கதிர்ஆனந்த் எம்.பி., ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலகத்தையும், கூட்ட அரங்கத்தையும் திறந்து வைத்தனர். துணை மேயர் எம்.சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மண்டல குழு தலைவர்கள் உள்பட பலர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆர்.பி.ஏழுமலை, சந்திரசேகர், சக்கரவர்த்தி, கணேஷ் சங்கர், முருகன், சேகர், சுதாகர், சதீஷ்குமார், தர்வாம்பாள், மம்தா, அமலா, மாலதி, சுமதி, ராஜேஸ்வரி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story