ஆம்புலன்ஸ் உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது
ஆம்புலன்ஸ் உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். கரூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரும் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் 2 பேருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், நஞ்சை காலக்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார் (26), ராமானுஜம் நகரை சேர்ந்த தமிழ்வாணன் (30) ஆகிய 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து, கார்த்திக், ராஜ்குமார், தமிழ்வாணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story