வேடசந்தூரில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது


வேடசந்தூரில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர்கள் ராஜா முகமது (வயது 33), ரசீத் அகமது (26), யாசர் அராபத் (23). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வேடசந்தூர் ஆத்துமேட்டில், ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 45 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகனுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த ராஜாமுகமது உள்பட 3 பேரும், அந்த பெண்ணை வழிமறித்து ரகளை செய்தனர். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணை 3 பேரும் தாக்கினர். அதேபோல் அப்பெண்ணின் மகனையும் தாக்கி காயப்படுத்தினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அந்த பெண், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாமுகமது, ரசீத் அகமது, யாசர் அராபத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story