நர்ஸ் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது


நர்ஸ் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது
x

நர்ஸ் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் மரியதாசன் மனைவி கிறிஸ்டி சகாயராணி. இவர் முதலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20-ந் தேதி காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். மரியதாசன் வள்ளியூர் அருகே உள்ள கோவனேரி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 46 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கந்தபுரத்தைச் சேர்ந்த சூசைராஜ் மகன் செல்வராஜ் (வயது 34), இளையபெருமாள் மகன் சங்கர் (39), திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளை சேர்ந்த அந்தோணி ராஜன் மகன் மைக்கேல் ராஜ் (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகள், லோடு ஆட்டோ ஆகியவை மீட்கப்பட்டது. பின்னர் 3 பேரையும் போலீசார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story