மது-கஞ்சா விற்ற 3 பேர் கைது
மது-கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையம் பகுதியில் லாலாபேட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளபாளையம் ரைஸ்மில் அருகே மது விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தனபால் (வயது 47), ராஜேஷ்சர்மா (37) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாலாபேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியில் லாலாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (22) என்பவர் பிடாரி அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவும் பறிமுத் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story