புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வெள்ளியணை,

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்படை போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் மற்றும் போலீசார் உப்பிடமங்கலம் மற்றும் வெள்ளியணை கடைவீதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உப்பிடமங்கலத்தில் தெற்கு கேட் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (64) என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடை, சின்ன கவுண்டன் புதூரை சேர்ந்த பழனிச்சாமி (60) என்பவர் நடத்தி வந்த டீக்கடை, வெள்ளியணை தெற்கு பகுதியில் சூர்யா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (60) என்பவர் நடத்தி வந்த மளிகை கடை ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தனிபடை போலீசார் அவற்றுடன் மேற்கண்ட 3 நபர்களையும் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்த தகவல் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உப்பிடமங்கலத்திற்கு வந்த தாந்தோணிமாலை வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முருகராஜ் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பெட்டிக்கடை மற்றும் டீ கடைக்கு சீல் வைத்தனர்.


Next Story