168 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது


168 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 168 கிலோ புகையிலை பொருட்கள், 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 168 கிலோ புகையிலை பொருட்கள், 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள்

திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, கூல்லிப், உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

3 பேர் கைது

அதில் அவர்கள் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கலீல்ரகுமான், குன்னலுரை சேர்ந்த வெங்கடேசன், நெடுங்குளம் பகுதியை சேர்ந்த ராஜா என்பதும் அவர்கள் கொண்டு வந்த மூட்டையில் 168 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, கூல்லிப், போன்ற பொருள்கள் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பொருட்களை மற்றும் அதற்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 168 கிலோ போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story