ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 3 பேர் கைது


ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 3 பேர் கைது
x

போலி ஆவணங்களை காட்டி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான்:

நெல்லை அருகே கங்கைகொண்டானில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சரவணகுமார் என்பவர் டிரான்ஸ்போர்ட் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் கோவை சூலூரை சேர்ந்த உதயநிதி (வயது 35), ஜெயப்பிரகாஷ் (22), மதுரை மேலூரை சேர்ந்த பாண்டிதுரை (24) ஆகிய 3 பேரும் போலியான ஆவணங்களை காட்டி ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஆஸ்பெஸ் டாஸ் சீட்டை நூதன முறையில் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story