கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 3 பேர் கைது


கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 3 பேர் கைது
x

கடையம் அருகே கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே லட்சுமியூரில் தேவி சக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள ஐம்பொன் சிலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு மடத்தூர் பகுதியில் கடையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர்.

விசாரணையில், லட்சுமியூரை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய தீவிர விசாரணையில், ராஜ்குமார், குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற முகமது நசிப், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற சலீம் ஆகியோருடன் சேர்ந்து தேவி சக்தி அம்மன் கோவிலில் இருந்த ஐம்பொன் சிலையை திருடிச் சென்றதும், பல இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story