தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
நெய்வேலி அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 47). சம்பவத்தன்று இவரும், இவருடைய நண்பருமான அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன்(42) என்பவரும் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பு அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர், முன்விரோதம் காரணமாக சக்திவேலையும், இளங்கோவனையும் சரமாரியாக தாக்கினர். இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாாின்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கொலை செய்ததாக சின்னகாப்பான்குளத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விக்கி என்கிற விக்னேஷ்(30). 28-வது வட்டத்தை சேர்ந்த சேகர் மகன் பாண்டியன்(25), ஆரோக்கியதாஸ் மகன் அர்னால்டு(22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.