விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 3 பேர் படுகாயம்


விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 3 பேர் படுகாயம்
x

விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 3 பேர் படுகாயம்

விருதுநகர்

அருப்புக்கோட்டை

சென்னை ஆவடியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 19 பேர் வேனில் அய்யப்பன் கோவில் சென்று விட்டு வரும் வழியில் திருச்செந்தூர் சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கட்டங்குடி விலக்கில் திடீரென குறுக்கே வந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதி மறுபக்கம் சாலையில் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரியின் மீதும் மோதியது.. இந்த விபத்தில் லாரி டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த நாகபாண்டியன் (வயது 47) மற்றும் வேனில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் தேனியை சேர்ந்த மோகன்(38), சென்னையை சேர்ந்த பாண்டியன்(41), சந்தோஷ் (30) ஆகிய 4 பேர் லேசான காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story