மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாற்று படுகையில் இருந்து தேவிகாபுரம் வழியாக 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி கொண்டு வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவி்டடு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story