கோழிக்கடை ஊழியர்கள் 3 பேர் கைது


கோழிக்கடை ஊழியர்கள் 3 பேர் கைது
x

வாடிக்கையாளரை தாக்கிய கோழிக்கடை ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை,

மதுரை திருப்பாலை விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). சம்பவத்தன்று இவர் தபால்தந்தி நகரில் உள்ள கடையில் கோழிக்கறி வாங்கி உள்ளார். அது சரியாக வேகவில்லை என்று அங்குள்ள ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். இதனால் அவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கடை ஊழியர்கள் 3 பேர் சேர்ந்து அருண்குமாரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியர்களான கலைநகரை சேர்ந்த பிரேம்குமார் (40), ஊமச்சிகுளம் தங்கபாண்டி (27), பூதக்குடி நந்தகுமார் (28) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story