கஞ்சா வைத்திருந்தகல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்தகல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
x

திட்டக்குடி பஸ் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்தகல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் நேற்று திட்டக்குடி பஸ் நிலையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஆவின் பால் பூத் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 3 பேர் அங்கிருந்து ஓட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, அவர்களை சோதனையிட்டதில், அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் அரங்கூர், தச்சூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர்கள் என்பதும், திட்டக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story