மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 ஆடுகள் பலி
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 ஆடுகள் பலியாகின.
ராணிப்பேட்டை
வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலால் அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரக்கோணம் சோமசுந்தரம் நகரை சேர்ந்த துரைக்கண்ணுவின் இரண்டு பசுமாடு மற்றும் புளியமங்கலம் ராம் நகரை சேர்ந்த குமாரசாமி என்பவரின் ஒரு பசுமாடு, புளியமங்கலம் பகுதியில் உள்ள வயலில் நேற்று மதியம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின் வயர் அருந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பசு மாடுகள் பரிதாபமாக இறந்தன. அதே போன்று அரக்கோணம் அடுத்த அணைக்கட்டபுதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் இரண்டு செம்மரி ஆடுகள் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் மேய்ந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்தன. இது குறித்து மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story