ரூ.3¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.3¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x

ரூ.3¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் செய்ய மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். செயலாளர் (பொறுப்பு) ராமாமணி வரவேற்றார். கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கு 15-வது மத்திய நிதி மானியத்தில் 2-ம் கட்ட பணிகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சமும், மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் என ரூ.3 கோடியே 81 லட்சத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story