3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி, ஜூன்.18-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட .38, 39, 40, 41, 42 மற்றும் 43-வது வார்டுக்குட்பட்ட காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவெறும்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் உள்ள ஆரக்குழாய்கள் பழுதடைந்துள்ளதால் பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தரைமட்ட தொட்டிகள் மராமத்து பணி நடைபெற உள்ளது. எனவே திருவெறும்பூர் ஒன்றிய காலனி, வள்ளுவர் நகர், கைலாஷ் நகர், விக்னேஷ் நகர், வைத்தியலிங்கம் நகர், கணேஷ் நகர், மஞ்சதிடல், சக்தி நகர், ஸ்ரீபாலாஜி நகர், கொக்கரசம்பேட்டை, எல்லக்குடி, ஆலத்தூர், கே.கே.கோட்டை அக்ரஹாரம், காவேரி நகர், காந்தி நகர், பாத்திமாபுரம், முருகன் கோவில் தெரு, அழகு மாரியம்மன் கோவில் தெரு, பர்மா காலனி, வேணுகோபால் நகர், பாரதிதாசன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்களுக்கு குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story