தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்,தென் தமிழகம் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை , நாளை மறுநாள் தென் தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story