3 வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்
3 வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்
வலங்கைமானை அடுத்த ஊத்துக்காடு கிராமம் வெட்டாறு பிரிவு வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெட்டாறு பிரிவு வடக்கு ராஜன் கிளை வாய்க்கால்களான சி மற்றும் இதர வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்கால்களில் நாணல் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் இந்த கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதையடுத்து ஊத்துக்காடு பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் ரூ.1 லட்சம் சொந்த நிதி திரட்டி வாய்க்கால்களை தூர்வார திட்டமிட்டனர். இதையடுத்து 6 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வாய்க்கால்களை தூர்வாரி வருகின்றனர்