கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 March 2023 12:30 AM IST (Updated: 12 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா வியாபாரிகள்

திருச்சியை அடுத்த திருவானைக்காவல் பொன்னுரங்கபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முருகானந்தம் (வயது 33). இவர் தற்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா முடுக்குப்பட்டி முத்துராஜா தெருவில் வசித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூடநாணல் தெற்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் தங்கதுரை (26).

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் அடுத்த வடகட்டளை வெள்ளைத்திடல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் மியா என்ற ரஞ்சித் (22). இவர்கள் 3 பேரும் கஞ்சா வியாபாரிகள் ஆவர்.

குண்டர் சட்டத்தில் கைது

இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி ஆகியோர் குண்டர் சட்டத்தில் முருகானந்தம், ரஞ்சித், தங்கதுரை ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story