3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்


3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
x

3 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு அரபுக்கல்லூரி அருகில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ராஜம்மாள், மகன்கள் செல்வராஜ்(வயது36), ரமேஷ் (32). ஆடு மேய்க்கும் தொழிலாளிகளான இவர்கள், சொந்தமாக அடுத்தடுத்து 3 கூரை வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து 3 வீடுகளும் முழுவதும் எரிந்தன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். வீடுகளில் வைத்திருந்த, பாத்திரங்கள், உடைகள், நகை அடகு சீட்டு, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. ேமலும் 3 பேர் வீட்டிலும் தலா 2 மூட்டை அரிசி மற்றும் செல்வராஜ் வீட்டில் ரூ.4 ஆயிரம், ராஜம்மாள் வீட்டில் ரூ.400 மற்றும் செல்வராஜின் மகள் சஞ்சனாவின் காதுகேளாதோருக்கான கருவி முழுவதும் எரிந்து விட்டன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது கியாஸ் கசிவால் ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தலா ரூ.10 ஆயிரம், 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் வருவாய்த்துறை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story