மினி பஸ் மோதியதில் மின்கம்பம் முறிந்தது3 பேர் காயம்


மினி பஸ் மோதியதில் மின்கம்பம் முறிந்தது3 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:45 AM IST (Updated: 24 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மினிபஸ் மோதியதில் மின் கம்பம் முறிந்தது. இதில் பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

திருவாரூர்

கோட்டூர் அருகே மினிபஸ் மோதியதில் மின் கம்பம் முறிந்தது. இதில் பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

மின்கம்பத்தில் மோதியது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது50) ஓட்டினார். கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அங்கிருந்த குட்டையில் இறங்கியது.

இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் மின் கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன. இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story