சரக்கு வேன் மோதி 3 பேர் படுகாயம்


சரக்கு வேன் மோதி  3 பேர் படுகாயம்
x

வடமதுரை அருகே சரக்கு வேன் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள புதுக்களராம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர், ஊராளிபட்டி பிரிவில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தன்னுடன் வேலை பார்க்கும் ராமமூர்த்தி, செல்வம் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராமமூர்த்தி ஓட்டினார்.

வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு அருகே மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்த சரக்குவேன், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமமூர்த்தி, மணிகண்டன், செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story